Monday, March 1, 2021

Body & Sex

 நான் திருமணம் செய்து கொண்டது 1987ம் ஆண்டு. எங்களுக்கு ஒரு பொதுவான நண்பர் சாம் லெனர்ட் கார் என்ற  தஞ்சாவூர் வம்சாவளி அமெரிக்கர் ஒரு புத்தகம் பரிசளித்தார்.

வாசிப்பு என்பது ரத்தத்தில் ஊறிப் போன நான் ஆர்வமாக பிரித்து பார்த்தால் Body & Sex என்ற ஆங்கில புத்தகம். அனைத்தும் டொம்மணக்கா படங்கள் நிறைந்த செக்ஸ் முதல் குழந்தை தரித்தல் குழந்தை பிறப்பு  என்று விலாவாரியாக அனைத்தையும் பேசின புத்தகம்.

ச்சீய் என்று இரு கைகளாலும் முகத்தை மூடி பிறகு விரலிடுக்கு வழியாக பார்த்து பிறகு படிக்க ஆரம்பித்தேன். உடலுறவு குறித்து ஒரு மண்ணும் தெரியாத எங்களுக்கு பெரிய பைபிள் போல ஆனது. 

குழந்தை உண்டான போது அனைத்துக்கும் அதை எடுத்து வாசிப்போம். வாராவாரம் குழந்தை வளர்ச்சி பற்றிய படங்களுடன் கூடிய பாடங்களை வாசித்து பரவசமடைந்தோம்.

முப்பது வருடங்களுக்கு மேலாகிறது. இன்றைக்கும் கூட அது போல ஒரு புத்தகம் யாருக்கும் பரிசளிக்க என்னால் முடியுமா என்பது கேள்விக்குறி தான். அது நமது கேரக்டர் சமபந்தமானதாகி விடும் நம் சமூகத்தில் 🙄🙄

அன்று எந்த பெரியவர்களின் வழிகாட்டலும் இன்றி நானே ராஜா நானே மந்திரி என்ற வாழ்க்கையில் இது போன்றவைகள் வழிகாட்டிகள் ஆயின. ஆனால் இன்றைக்கு பார்ன் ஸைட் முதல் யூடியூப் என்று அத்தனை ஆயிரம் வழிகள் உண்டு நல்லது கெட்டது கற்றுத் தெரிந்து கொள்ள. 

இன்றைய உலகம் எனக்கு மிகவும் பிடித்த உலகம். இதற்கு ஏக்கப் பட்ட என் தலைமுறை மனிதர்களின் வெற்றியை இன்றைய தலைமுறை அனுபவிக்கின்றனர் கொண்டாட்டம் ஏதுமின்றி. 

ஏனெனில் அவர்கள் கேட்டு பெற்றதில்லை இவ்வாழ்வு. சாதாரணமாக கிடைக்கப் பெற்றது. "தடை அதை உடை" என்றவர்கள் போராடிப் பெறறதுதான் இந்த சமூகம் மற்றும் அது சார்ந்த அறிவியலும்.

No comments:

Post a Comment